
உலக ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அதன் காலிறுதி வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகிவிடும். எனினும், முந்தை ஆட்டத்தில் தென் ஆப்பரிக்காவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு சற்று கடினமான இலக்காகும். இந்த ஆட்டம் மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.
இதனிடையே, சனிக்கிழமை நடைபெற உள்ள இதர ஆட்டங்களில் கொரியா-ஆஸ்திரியா, தென் ஆப்பிரிக்கா-கனடா, ஆர்ஜென்டீனா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது. எகிப்தை 4-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியமும், மலேசியாவை 7-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தும் வீழ்த்தின.
ஆஸ்திரியா - ஆர்ஜென்டீனா மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.