இன்று மோதுகிறது இந்தியா – ஆஸ்திரேலியா: வெல்லுமா ஆஸ்திரேலியா?

 
Published : Sep 28, 2017, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
இன்று மோதுகிறது இந்தியா – ஆஸ்திரேலியா:  வெல்லுமா ஆஸ்திரேலியா?

சுருக்கம்

India - Australia fights today

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் இன்றுத் தொடங்குகிறது.

முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றிக் கண்ட இந்திய அணி, தொடரையும் கைப்பற்றிவிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் எவ்வித நெருக்கடியும் இன்றி இந்திய அணி களமிறங்கும்.

ஆஸ்திரேலிய அணி, இந்தத் தொடரில் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோற்குமானால், தரவரிசையில் இறக்கத்தைச் சந்திக்கும். அதாவது 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்படும்.

இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி வருகின்றனர்.

கடந்த ஆட்டத்தில் ரஹானே 70 ஓட்டங்கள், ரோஹித் சர்மா 71 ஓட்டங்கள் குவித்தனர். அவர்கள் இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் முன்வரிசையில் களமிறங்கி 72 பந்துகளில் 78 ஓட்டங்கள் குவித்த ஹார்திக் பாண்டியா இந்த ஆட்டத்திலும் முன்வரிசையில் களமிறக்கப்படலாம்.

கடந்த மூன்று ஆட்டங்களிலும் வாய்ப்பு கிடைக்காத கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்கலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது.

இந்தூரில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் தடுமாறினாலும், கடைசிக் கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அந்த அணியை கட்டுப்படுத்தினர்.

எனவே, இந்த ஆட்டத்திலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபிஞ்சின் வருகையால் நம்பிக்கை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் சதமடித்த அவர் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடுவார்.

மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் ஓரளவு சிறப்பாக ஆடி வருகின்றனர்.

ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூன்று பேரும் எப்படி ஆடுகிறார்கள். 

மிடில் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவர்களால் பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகவே அமையலாம்.

பின்வரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் சிறப்பாக ஆடினாலும், அவருக்கு சரியான ஜோடி கிடைக்காததால், ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக திருப்ப முடியவில்லை. 

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நாதன் கோல்ட்டர் நீல், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆஷ்டன் அகர் வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகிவிட்டார். அதனால் சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆடம் ஸம்பாவையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா அணி:

அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.

ஆஸ்திரேலியா அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (விக்கெட் கீப்பர்), பட் கம்மின்ஸ்/ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்றால் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்ற பெருமையைப் பெறும்.

இதுவரையில் 7 அணிகள் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வாகை சூடியுள்ளன. ஆஸ்திரேலியா ஆறு முறையும், தென் ஆப்பிரிக்கா ஐந்து முறையும், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் தலா இரண்டு முறையும், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகியவை தலா ஒரு முறையும் தொடர்ச்சியாக பத்து ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.

எனினும் தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி கண்டதே இன்றளவும் சாதனையாக உள்ளது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!