
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலமான தர்மசாலாவில் இன்று தொடங்கிற்று.
மொத்தம் நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் 1 - 1 என்ற சம நிலையில் இருக்கின்றன. ஒரு போட்டி சமனில் முடிந்தது.
எனவே, இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுமோ அதுவே தொடரையும் கைப்பற்றும்.
இந்தியாவை வீழ்த்தித் தொடரைக் கைப்பற்றும் நினைப்பில் ஆஸ்திரேலியா மும்முறமாக களமிறங்கிய நிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரைக் கைப்பற்றியே ஆகணும் என்ற தர்மசங்கடத்தில் இருக்கிறது இந்திய அணி.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியில் காயம் காரணமாக கோலி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று, இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.