யு-17 கால்பந்து: முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் மண்ணை கவ்வியது இந்தியா…

Asianet News Tamil  
Published : Oct 07, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
யு-17 கால்பந்து: முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் மண்ணை கவ்வியது இந்தியா…

சுருக்கம்

In the first tournament the United States

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் பங்கமாக தோற்று மண்ணைக் கவ்வியது.

யு-17 என்னும் பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. அதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

டெல்லியில் மாலை 5 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் (குரூப் ஏ) கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கானாவின் இப்ராஹிம் கோலடித்தார். இதையடுத்து ஸ்கோரை சமன் செய்ய கடுமையாகப் போராடியது கொலம்பியா. ஆனால் அதற்கு இறுதிவரை பலன் கிடைக்காததால் கானா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

மற்றொரு ஆட்டம் நவி மும்பையில் மாலை 5 மணிக்கு குரூப் பி நியூஸிலாந்தும், துருக்கியும் மோதின.

இந்த ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் துருக்கி வீரர் அஹமது கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் துருக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் நியூஸிலாந்து வீரர் மட்டா கோலடிக்க, ஸ்கோர் 1-1 என்ற சமநிலையை எட்டியது. இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

பின்னர் டெல்லியில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் படுதோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அமெரிக்காதான் ஆதிக்கம் செலுத்தியது. 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க அமெரிக்காவுக்கு அதில் சார்ஜென்ட் கோலடித்தார். 

அதனைய்த் தொடர்ந்து 51-வது நிமிடத்தில் டர்கினும், 84-வது நிமிடத்தில் கார்ல்டானும் கோலடிக்க, அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி, முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி கண்டு மண்ணைக் கவ்வியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!