புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி அசத்தியது குஜராத்…

Asianet News Tamil  
Published : Oct 07, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி அசத்தியது குஜராத்…

சுருக்கம்

Pro Kabaddi The Jaipur team has been defeated by Gujarat ...

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 111-வது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 29-23 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 111-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சந்திரன் ரஞ்சித் இரண்டு புள்ளிகளைக் கைப்பற்ற, 3-வது நிமிடத்தில் 3-0 என முன்னிலைப் பெற்றது குஜராத்.

அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூரும் அபாரமாக விளையாடியதால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 11-11 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 25-வது நிமிடத்தில் குஜராத் 15-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மீண்டும் அபாரமாக ஆடி 29-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் 16-16 செய்தது ஜெய்ப்பூர்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் 4 புள்ளிகளைப் பெற்ற குஜராத் 20-16 என்ற முன்னிலையை பெற்றது. இதன்பிறகு இரண்டு சூப்பர் டேக்கிள் மூலம் 4 புள்ளிகளைப் பெற்ற ஜெய்ப்பூர், 35-வது நிமிடத்தில் 20-21 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.

ஜெய்ப்பூர் அணி 37-வது நிமிடத்தில் ஆல் ஔட்டாக குஜராத் 29-23 என்ற கணக்கில் வெற்றி கண்டது. 

இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 12-வது வெற்றியைப் பெற்று, 72 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

ஜெய்ப்பூர் அணி 16 ஆட்டங்களில் விளையாடி 7-வது தோல்வியை பெற்று 45 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 5-வது இடத்தில் உள்ளது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!