2019-ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடியே தீருவேன் - யுவராஜ் சிங் பளீச்...

 
Published : Dec 05, 2017, 10:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
 2019-ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடியே தீருவேன் - யுவராஜ் சிங் பளீச்...

சுருக்கம்

I will play cricket until 2019 - Yuvraj Singh

வயதாகிக் கொண்டிருந்தாலும்  2019-ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறினார்.

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "கடந்த 17 ஆண்டுகளாக நான் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறேன். கடந்த மூன்று உடற்தகுதி சோதனைகளில் தோல்வியைச் சந்தித்தேன். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.

எனது எதிர்காலம் குறித்த முடிவை நான் மட்டுமே மேற்கொள்வேன். தோல்வியைக் கண்டு எனக்கு பயமில்லை. வாழ்வில் வெற்றியாளராக மிளிர வேண்டும் என்றால், முதலில் நீங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

நான் இப்போதும் கிரிக்கெட் விளையாடுகிறேன். அடுத்து எந்த முறையிலான போட்டியில் விளையாடப் போகிறேன் எனத் தெரியவில்லை. வயதாகிக் கொண்டு வருவதால், முன்பை விட அதிகமாக என்னை தயார்படுத்திக் கொள்கிறேன்.

எத்தனை தோல்விகள் வந்தாலும், 2019-ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடுவேன். அதன் பிறகே இதர முடிவுகள் குறித்து யோசிப்பேன்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்
விஜய் ஹசாரே தொடரில் அதிரடி சதம்.. கம்பீரை கழுவி கழுவி ஊற்றும் ரோகித், கோலி ரசிகர்கள்