
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன் எடுப்பது எவ்வளவு கடினமான ஒன்று என்று ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தெரிந்திருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
பிசிசிஐ இணைய தளத்துக்கான நேர்க்காணலில் பங்கேற்ற கோலி பின்வருமாறு கூறினார்.
"டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முறை எனக்கு விருப்பமான ஒன்றாகும். கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டி முக்கியமான ஒன்று.
டெஸ்ட் போட்டியில் ஒரு ரன் எடுப்பதோ, ஒரு விக்கெட் வீழ்த்துவதோ எவ்வளவு கடினமான ஒன்று என ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும், பந்துவீச்சாளருக்கும் தெரிந்திருக்கும். இதுவே, கடினமான ஆடுகளங்களில் இன்னும் சவாலாக இருக்கும்.
டெஸ்ட் போட்டியில் நிறைவான திருப்தியுடன் விளையாட இயலும். மாறாக, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் உணர்வுப் பூர்வமாக விளையாட வேண்டியிருக்கும். மைதானம் நிரம்பியிருக்கும்போது வெற்றி, தோல்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று அதிகம் ஸ்கோர் செய்வதை புஜாராவைப் பார்த்து கற்றுக் கொண்டேன்.
எங்களுக்கான காலம் களத்தில் அதிகம் கிடையாது என்பதை, தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாக அறிந்துள்ளோம். எனவே, களத்தில் இருக்கும் காலத்தில் சிறப்பாகச் செயல்படும் வகையில், உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்கிறேன்" என்று கோலி கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.