
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நியூஸிலாந்தின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 45.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
அதிகபட்சமாக கிரென் பாவெல் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூஸிலாந்தின் தரப்பில் நீல் வாக்னர் அதிகபட்சமாக 7 விக்கெட்க்ளை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து, 148.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 520 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக பிளன்டெல் 107 ஓட்டங்கள் எடுத்தார். அவரும், போல்ட்டும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்கள் பின்தங்கிய மேற்கிந்தியத் தீவுகள், ஞாயிற்றுக்கிழமை முடிவில் 66 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பிரத்வெயிட் 79 ஓட்டங்கள், ஷாய் ஹோப் 12 ஓட்டங்களுடன் நேற்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். இதில் பிரத்வெயிட் சதமடிக்கும் வாய்ப்பை நழுவிட்டு 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஷாய் ஹோப் 37 ஓட்டங்கள், ரோஸ்டன் சேஸ் 18 ஓட்டங்கள், சுனில் அம்ப்ரிஸ் 18 ஓட்டங்கள், மிகெல் கம்மின்ஸ் 14 ஓட்டங்களில் வீழ்ந்தனர்.
டெளரிச், கேப்டன் ஹோல்டர், கெமர் ரோச் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர். இவ்வாறாக 106 ஓவர்களில் 319 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது மேற்கிந்தியத் தீவுகள்.
நியூஸிலாந்து தரப்பில் மாட் ஹென்ரி அதிகபட்சமாக மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
ஏழு விக்கெட் வீழ்த்திய நீல் வாக்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.