மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - கண்ணீர் விட்டு கலங்கிய ஸ்மித்...!

Asianet News Tamil  
Published : Mar 29, 2018, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - கண்ணீர் விட்டு கலங்கிய ஸ்மித்...!

சுருக்கம்

I made a big mistake tears of smith

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை இப்போது உணர்கிறேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டார்.  இப்போது அவரும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேப்டனாக விளையாட இருந்த வார்னரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. 

ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஸ்மித், வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்ட் ஆகியோர் மீது நேற்று தடை நடவடிக்கை மேற்கொண்டது. 

அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை இப்போது உணர்கிறேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். 


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!