
எனது மல்யுத்த வாழ்க்கை வரலாற்றை எவரும் படமாக்க விரும்பினால் அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.
சுல்தான், டங்கல் என மல்யுத்தம் தொடர்புடைய படங்கள் சமீபத்தில் வெளிவந்து சக்கைப் போடு போட்டன.
இதனையடுத்து ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் கதையும் படமாக்கப்படுமா என்று அவரிடம் கேட்டனர்.
இதற்கு சாக்ஷி மாலிக், “மல்யுத்தப் போட்டி குறித்து ஏற்கெனவே "சுல்தான்' படம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதே கதையம்சத்துடன் "டங்கல்' படம் திரைக்கு வந்துள்ளது நல்ல விஷயமாகும்.
எனது மல்யுத்த வாழ்க்கை வரலாற்றை எவரும் படமாக்க விரும்பினால் அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
என் வேடத்தில் எந்த நடிகை நடிக்கலாம் என்பது குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை.
என் வாழ்க்கை வரலாற்றுப் படத்தினால் நாட்டில் மல்யுத்த விளையாட்டு பிரபலமாகும் என்றால் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சாக்ஷி மாலிக் பதிலளித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.