
ஐபிஎல் தொடரின் 10வது போட்டியில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் உத்தப்பா வெறும் 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான கிறிஸ் லின் அதிரடியாக ஆடி 49 ரன்களை குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் மட்டுமே 29 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.
139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, கேப்டன் கேன் வில்லியம்சனின் அரைசதத்தால் 19 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.