வலைகோல் பந்தாட்டம் ஜனவரி 21-ல் தொடக்கம்…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
வலைகோல் பந்தாட்டம் ஜனவரி 21-ல் தொடக்கம்…

சுருக்கம்

5-ஆவது ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) வலைகோல் பந்தாட்டப் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தபங் மும்பை-ராஞ்சி ரேய்ஸ் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் பிப்ரவரி 25-ஆம் தேதியும், இறுதிப் போட்டி 26-ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியானது, நடப்புச் சாம்பியனான பஞ்சாப் மாநிலத்தின் சண்டீகரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா லீக் ஆகியவற்றின் தலைவர் நரீந்தர் துருவ் பத்ரா கூறியதாவது:

“எதிர்வரும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியானது, ஹாக்கி விளையாட்டுப் போட்டியின் நிலையான வளர்ச்சியை பறைசாற்றுவதற்கான உதாரணமாக இருக்கும். இந்த ஆண்டு ஹாக்கிஇந்தியா லீக் போட்டியில், புதிதான ஊடகங்களின் மூலம் ரசிகர்களை ஈர்க்கவும், அதேவேளையில், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் வருமானத்தை பெருக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியில் சர்வதேச அளவிலான சிறந்த வீரர்களுடன் விளையாடும் காரணத்தால், இந்திய ஹாக்கி வீரர்களின் திறமை மேம்படும். இதன் மூலம் அவர்கள் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள இயலும்” என்று நரீந்தர் கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!