என்ன நடந்துச்சுனே தெரியாமல் நடையை கட்டிய முன்ரோ!! முதல் டி20-யில் நடந்த சுவாரஸ்யம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 7, 2019, 2:20 PM IST
Highlights

நியூசிலாந்தில் நடந்துவரும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துவருகின்றன. அப்படியொரு சம்பவம் முதல் டி20 போட்டியிலும் நடந்தது. 
 

நியூசிலாந்தில் நடந்துவரும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துவருகின்றன. அப்படியொரு சம்பவம் முதல் டி20 போட்டியிலும் நடந்தது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று வெலிங்டனில் நடந்தது. இந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான முன்ரோவும் சேஃபெர்ட்டும் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

அவர்கள் இருவரும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, 4வது ஓவரில் திடீரென ஸ்டிக் கீழே விழுந்தது. பந்தை வீச ஓடிவந்து கொண்டிருந்த கலீல் அகமது பாதியிலேயே நிறுத்தப்பட்டார். ஸ்டிக் கீழே விழுந்ததை பார்த்த முன்ரோ, தான் தட்டிவிட்டதாக நினைத்து பெவிலியனை நோக்கி நடந்தார். ஆனால் அதிகமான காற்றின் காரணமாக ஸ்டிக் கீழே விழுந்தது. அதை அறிந்த பின்னர் மீண்டும் பேட்டிங் ஆடினார். ஸ்டிக் எப்படி கீழே விழுந்தது என்பதை உறுதி செய்யாமல் தான் தட்டிவிட்டதாக நினைத்து நடையை கட்டினார் முன்ரோ. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் சூரிய ஒளி அதிகமாக இருந்ததால் போட்டி தடைபட்டது. போதிய வெளிச்சம் இல்லாமல் தடைபட்ட போட்டிகள் உண்டு. ஆனால் அதிகமான வெளிச்சத்தால் நிறுத்தப்பட்ட போட்டி அது. சூரிய ஒளி, சூறைக்காற்று ஆகியவற்றால் நியூசிலாந்து தொடரில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துவருகின்றன.  
 

click me!