
இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொடுத்த ஆலோசனைகள்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எனது முன்னேற்றத்துக்கு உதவியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு நியூஸிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் களம் கண்ட தினேஷ் கார்த்திக், முதல் ஆட்டத்தில் 5-வது வீரராக ஆடி 37 ஓட்டங்கள் எடுத்தார்.
இரண்டாவது ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் விளாசினார்.
இந்த நிலையில், தனது இந்த முன்னேற்றம் குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
"நியூஸிலாந்திற்கு எதிரான அந்தத் தொடரில் விளையாடியது எனது சிறப்பான ஆட்டமா? எனத் தெரியாது. ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கும், அணிக்கும் அது முக்கியமான ஒன்றாக இருந்தது.
எனது பேட்டிங் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் கலந்தாலோசித்தேன். நியூஸிலாந்துக்கு எதிரான எனது ஆட்டம் அவருக்கு திருப்தி அளித்திருந்தது. இருப்பினும், பேட்டிங்கில் நான் கவனம் செலுத்த வேண்டிய சில இடங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். அவற்றில் கவனம் செலுத்தி ஆடி வருகிறேன்.
அதேபோல், எனது முன்னேற்றத்தில் அபிஷேக் நாயரும் குறிப்பிடத்தக்க ஒரு நபர். அவருடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரின்போது கூட அவர் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார்" என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.