இந்திய பவுலிங்கை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர் ஹெட்மயர் அபார சதம்!! மெகா ஸ்கோரை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்

Published : Oct 21, 2018, 04:19 PM IST
இந்திய பவுலிங்கை அடித்து துவம்சம் செய்த இளம் வீரர் ஹெட்மயர் அபார சதம்!! மெகா ஸ்கோரை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஹெட்மயர் இந்திய அணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்து சதம் விளாசினார். அவரது அதிரடியால் மெகா ஸ்கோரை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிவருகிறது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. இந்திய அணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்த ஹெட்மயர் சதம் விளாசி தொடர்ந்து ஆடிவருகிறார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி குவாஹத்தியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக கிரன் பவல் மற்றும் சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார் பவல். அதன்பிறகு மீண்டும் ஷமி வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ஹேம்ராஜ்.

இதையடுத்து 5வது ஓவரை வீசிய ஷமி, ஹேம்ராஜின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பிறகு பவலுடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். பவல் தொடர்ந்து அதிரடியாக ஆடி பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 51 ரன்கள் குவித்த பவல், இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதன்பிறகு களத்திற்கு வந்த அந்த அணியின் அனுபவ வீரர் சாமுவேல்ஸ் இரண்டவது பந்திலேயே சாஹலின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். சிறப்பாக ஆடிவந்த அவசரப்பட்டு ஷமி பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹெட்மயர் - ரோமன் பவல் ஜோடி அடித்து ஆடியது. பவுண்டரிகளாக விளாசிய பவல் 22 ரன்களில் ஜடேஜாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அதிரடியாக ஆடி சிக்ஸர்களாக விளாசிய ஹெட்மயர் அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.  விக்கெட்டுகள் விழுந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பயப்படமால் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹெட்மயர் சதம் விளாசினார். 

ஹெட்மயருடன் அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 32 ஓவருக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களை எட்டிவிட்டது. ஹெட்மயரின் அதிரடியால் அந்த அணி தொடர்ந்து ரன்களை குவித்துவருகிறது. ஹெட்மயர் களத்தில் நிலைத்து நின்றுவிட்டதால் கடைசி 10 ஓவர்களில் கண்டிப்பாக தாறுமாறாக அடித்து ஆடுவார். எனவே இந்திய அணிக்கு மிகச்சவாலான ஸ்கோரை இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து