அவங்க 2 பேரும் வேலைக்கு ஆகமாட்டாங்க.. முதல் டெஸ்டில் களமிறங்கும் 3 பவுலர்கள் இவங்கதான்!!

By karthikeyan VFirst Published Dec 4, 2018, 5:40 PM IST
Highlights

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என நல்ல கலவையிலான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. எனவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்த முறை இந்திய அணி சிறப்பாக ஆடி தொடரை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, தொடர் தோல்விகளிலிருந்து மீள இந்த தொடரை வெல்வது அவசியம். அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரை வென்று உத்வேகம் பெறும் முனைப்பில் உள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் வலுவிழந்து ஆஸ்திரேலிய அணி திணறிவரும் நிலையில், இந்திய அணி முன்னெப்போதையும் விட வலுவான வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளது. பேட்டிங்கில் மட்டுமே சிறந்த அணியாக விளங்கிய இந்திய அணி, தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. 

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என நல்ல கலவையிலான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. எனவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்த முறை இந்திய அணி சிறப்பாக ஆடி தொடரை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில் எந்த 3 வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்தது. ஜாகீர் கான், புவனேஷ்வர் குமாரை தவிர மற்ற 4 பவுலர்களையும் டெஸ்ட் தொடர் முழுக்க பயன்படுத்துமாறு ஆலோசனை கூறியிருந்தார். 

ஏனென்றால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து ஸ்விங் ஆகாது. மாறாக நல்ல வேகத்துடன் பவுன்ஸ் ஆகும். எனவே அங்கு ஸ்விங் பவுலரான புவனேஷ்வர் குமாரின் பவுலிங் எடுபடாது என்பது ஜாகீர் கானின் கருத்து. மேலும் மற்ற நால்வரையும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். 

எனினும் ஆடும் லெவனில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும்தான் இடம்பெறுவர் என்ற நிலையில், அந்த மூவர் யார் என்பது பெரிய கேள்வி. அதிலும் ஃபில்டர் செய்தால், பும்ரா மற்றும் ஷமி ஆடுவது உறுதி. இஷாந்த் மற்றும் உமேஷ் ஆகிய இருவரில் ஒருவர் யார் என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. 

இந்நிலையில், பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம், அந்த கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது. பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி ஆகிய மூவரும் பயிற்சியில் பந்துவீசிய புகைப்படம் பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. எனவே இவர்கள் மூவரும் முதல் போட்டியில் களமிறங்குவர் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளது. 
 

click me!