ஒரு வெற்றிக்கு பிறகு மீண்டும் தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ் – 9 தோல்வியுடன் 11ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Jan 15, 2024, 2:18 PM IST

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான புரோ கபடி லீக்கின் 71ஆவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.


புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.

Rohit Sharma Captain: ஒரு கேப்டனாக குறைவான போட்டியிலேயே தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

அகமதாபாத், பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் நடந்த 4 போட்டியிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் தமிழ் தலைவாஸ் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 2ல் வெற்றி, 8 போட்டிகளில் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது.

Fan Touch Virat Kohli Feet: விராட் கோலியின் காலில் விழுந்து கட்டியணைத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் தான் நேற்று 71ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்கள் தொடக்க முதல் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழ் தலைவாஸ் வீரர்களும் போராடி வந்தனர்.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் சந்திரன் ரஞ்சித், மோகித் நந்தல், கேப்டன் ஜெயதீப் தஹியா, ரைடர் வினய் என்று ஒவ்வொருவரும் கோல் அடித்தனர். தமிழ் தலைவாஸ் அணியில், ரைடர் நரேந்தர், எம் அபிஷேக், டிபெண்டர் மோகித், சதீஷ் கண்ணன், டிபெண்டர் சாகர் ஆகியோர் கோல் அடித்தனர். எனினும் ஹரியான ஸ்டீலர்ஸ் அணி 36 புள்ளிகள் பெறவே தமிழ் தலைவாஸ் அணியானது 31 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதன் மூலமாக தமிழ் தலைவாஸ் அணியானது 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற இந்திய வீரர் யோகேஷ் சிங்!

மேலும், 12 போட்டிகளில் 3 வெற்றியும், 9 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் இருக்கிறது. ஹரியான ஸ்டீலர்ஸ் அணியானது விளையாடிய 12 போட்டிகளில் 7ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்த நிலையில் ஒரு போட்டியானது டிரா செய்யப்பட்டு 5ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹரியானா ஹாப்பி! 🥳

📺 காணுங்கள் | இன்று | 7:30 PM | 9:00 PM | Star Sports தமிழ் &
Disney+Hotstar-ல் pic.twitter.com/jMJZFARJjH

— Star Sports Tamil (@StarSportsTamil)

 

click me!