ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது போட்டியின் போது பீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோலியின் காலில் ரசிகர் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்குப் பதிலாக விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற்றனர். இதே போன்று ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷாவிற்குப் பதிலாக நூர் அகமது அணியில் இடம் பெற்றார்.
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்ற இந்திய வீரர் யோகேஷ் சிங்!
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக தொடங்கினர். ஆனால், அதற்குள்ளாக குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்பதீன் நைப் அதிரடியை காட்ட ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. எனினும், ஜத்ரன் 8 ரன்களில் வெளியேற அடுத்து வந்த அஸ்மதுல்லா உமர்சாய் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தாலும் நைப் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்திருந்த போது அக்ஷர் படேல் வர வைத்து அவரது கேட்சை பிடித்தார் ரோகித் சர்மா. பின்னர் வந்த நஜிபுல்லா ஜத்ரன் 23 ரன்களும், கரீம் ஜனத் 20 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 21 ரன்களும் எடுத்துக் கொடுக்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் டீப் மிட் விக்கெட் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலியின் காலில் ரசிகர் விழுந்த ரசிகரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரை கட்டி தழுவி பாதுகாவலர்களிடம் பொறுமையாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli saying security officers to be kind with the fan.
- A nice gesture by King. 👏pic.twitter.com/67GUmnHBHZ