இந்திய அணியின் பிரச்னைக்கு அவரு மட்டும் தான் தீர்வு!! உடனே டீம்ல எடுங்க.. முன்னாள் வீரர் அதிரடி ஆலோசனை

By karthikeyan VFirst Published Jan 13, 2019, 5:11 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரோஹித்தும் தோனியும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் தோனியின் மந்தமான பேட்டிங், கடைசி நேரத்தில் நெருக்கடியை அதிகரித்தது. 

இந்திய அணியில் நீடித்துவந்த மிடில் ஆர்டர் பிரச்னைக்கு ராயுடு மூலம் தீர்வு காணப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட நிலையில், இன்னும் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது என்பதை பறைசாற்றியிருக்கிறது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. 

இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. ரோஹித், தவான், கோலி என வலுவான டாப் ஆர்டரை கொண்ட இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பிரச்னை இருந்தது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு 4ம் இடத்தை ராயுடு பிடித்தார். அவரும் சிறப்பாகத்தான் ஆடிவருகிறார். எனினும் 6ம் இடத்தில் இறங்கும் தோனி ஃபார்மில் இல்லாத நிலையில், 5ம் வரிசை வீரரும் சரியாக செட் ஆகவில்லை. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரோஹித்தும் தோனியும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் தோனியின் மந்தமான பேட்டிங், கடைசி நேரத்தில் நெருக்கடியை அதிகரித்தது. ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனி அரைசதம் அடித்தது மட்டும்தான் அவரது இன்னிங்ஸில் மனதை தேற்றிக்கொள்ள கிடைத்த ஆறுதல்.

தினேஷ் கார்த்திக்கும் சோபிக்கவில்லை. இனிமேலும் தினேஷ் கார்த்திக்கை நம்பியெல்லாம் பிரயோஜனமே இல்லை. எனவே அந்த இடத்தில் ஒரு சரியான வீரரை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அந்த இடத்திற்கு ஒரு சிறந்த வீரர் தேவை. ‘

அந்த வகையில், ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியிலும் எடுக்க வேண்டும் எனவும் அவர் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வாக இருப்பார் எனவும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், ரிஷப் பண்ட் வியக்கத்தக்க வீரர். ஆடம் கில்கிறிஸ்ட்டை போன்றவர் ரிஷப் பண்ட். அசால்ட்டாக சிக்ஸர்களை விளாசுகிறார். அவர் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் 30 பந்துகள் ஆடினால், கண்டிப்பாக 6 சிக்ஸர் அடிப்பார். அது ஆட்டத்தையே மாற்றக்கூடும். எனவே ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 3 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டால், அடித்து ஆடக்கூடிய வீரர் மிடில் ஆர்டரில் தேவை. அந்த வகையில், ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் சேர்ப்பது, அணியை வலுப்படுத்துவதோடு மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வாகவும் அமையும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
 

click me!