உலக கோப்பையில் அவரு கண்டிப்பா ஆடணும்!! ஆல்ரவுண்டருக்காக வரிந்துகட்டிய ஹர்பஜன் சிங்

By karthikeyan VFirst Published Feb 7, 2019, 11:31 AM IST
Highlights

ரோஹித் சர்மா, தவான், கோலி, ராயுடு ஆகிய நால்வரும் முதல் நான்கு வரிசைகளில் இறங்குவது உறுதியாகிவிட்டது. விக்கெட் கீப்பரும் அனுபவ வீரருமான தோனி ஐந்தாம் வரிசையில் இறங்குவார். ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வருவது, ஒரு அணியாக இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

ரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மிக வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் பயங்கர மிரட்டலாக உள்ளது. இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ் மூலம் தீர்வு காணப்பட்ட திருப்தியில் இந்திய அணி உள்ளது. 

உலக கோப்பைக்கான இந்திய அணி பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒருசில வீரர்கள் மட்டும் கடைசி நேரத்தில் அணிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

ரோஹித் சர்மா, தவான், கோலி, ராயுடு ஆகிய நால்வரும் முதல் நான்கு வரிசைகளில் இறங்குவது உறுதியாகிவிட்டது. விக்கெட் கீப்பரும் அனுபவ வீரருமான தோனி ஐந்தாம் வரிசையில் இறங்குவார். ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர்களுக்கான இடத்தை ஹர்திக் பாண்டியாவும் கேதர் ஜாதவும் பிடித்துவிட்டனர். புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, சாஹல், குல்தீப் ஆகியோர் பவுலர்கள் ஆவர். தினேஷ் கார்த்திக் பெரும்பாலான போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்றாலும் அணியில் இருப்பார். 

குல்தீப், சாஹல் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசி இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டனர். எனினும் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்த ஜடேஜா, ஆசிய கோப்பையில் அபாரமாக ஆடி தனது இருப்பின் அவசியத்தை உணர்த்தினார். எனினும் குல்தீப், சாஹல் அணியில் ஆடும் பட்சத்தில் ஸ்பின் ஆல்ரவுண்டருக்கான இடத்தை கேதர் ஜாதவ் பிடித்துவிட்டார். எனவே ஜடேஜாவிற்கான இடம் சந்தேகம்தான். 

இந்நிலையில், ஜடேஜாவை உலக கோப்பையில் கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இங்கிலாந்தில் 2017ல் சாம்பியன்ஸ் டிராபி நடந்தபோது அங்கு மிகவும் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருந்தது. உலக கோப்பையின் போதும் அதேபோன்ற சூழல் நிலவினால் கண்டிப்பாக ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தும் ஒரு பேக்கேஜாக இருப்பார். எதிரணியில் 5 - 6 வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும்பட்சத்தில் ஜடேஜா அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பார். பேட்டிங்கிலும் இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜாவை 6ம் வரிசையில் இறக்கிவிட்டு, ஹர்திக்கை 7ம் வரிசையில் இறக்கினால் சிறப்பாக இருக்கும். மேலும் ஜடேஜாவின் ஃபீல்டிங் அபாரம். மிகச்சிறந்த ஃபீல்டரான ஜடேஜா, களத்தில் தனது அபாரமான ஃபீல்டிங்கால் பெரும் பங்களிப்பை அளிப்பார் என ஹர்பஜன் சிங் தெரிவித்தார். 
 

click me!