அஷ்வினுக்கு ஆப்பு.. சாஸ்திரி ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Feb 7, 2019, 10:27 AM IST
Highlights

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஆடாத அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வினை ஓரங்கட்டும் எண்ணத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். 

தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடி, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக பந்துவீசினர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்தனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து எதிரணி பேட்ஸ்மேன்களையும் தெறிக்கவிடுகின்றனர். இவர்கள் இருவரும்தான் உலக கோப்பையில் ஆட உள்ளனர். 

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டுக்கும் மேலாக ஆடாத அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வினை ஓரங்கட்டும் எண்ணத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். 

கிரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, குல்தீப் யாதவ் வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் அபாரமாக வீசிவரும் அவர்தான் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர். ஒரு ஸ்பின் பவுலருடன் களமிறங்கும் போட்டியில் குல்தீப் தான் ஆடுவார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் அஷ்வின் இந்திய அணியின் இரண்டாவது ஸ்பின் ஆப்சன் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 

ஒவ்வொருவருக்கும் அவருக்கான காலம் வரும். இது குல்தீப் யாதவிற்கான காலம். வெளிநாட்டு தொடர்களில் அவர்தான் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் குல்தீப்  யாதவின் பவுலிங் அபாரம். இது ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கான காலம். சிட்னியில் அவர் வீசிய பவுலிங், அவரை இந்திய அணியின் நம்பர் 1 ஓவர்சீஸ் ஸ்பின்னராக உருவெடுக்க வைத்தது என்று அஷ்வினை ஓரங்கட்டுவதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஸ்பின்னர்களில் ரிஸ்ட் ஸ்பின்னர், ஆஃப் ஸ்பின்னர் என்ற பேதமெல்லாம் கிடையாது. ஒரு தரமான ஸ்பின்னர் என்றுமே தரமான ஸ்பின்னர் தான். எனவே அஷ்வினை உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் என காம்பீர் வலியுறுத்தியிருந்தார். காம்பீர், அஷ்வினை ஒருநாள் போட்டிகளிலும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்த நிலையில், சாஸ்திரியோ அஷ்வின் ஏற்கனவே ஆடிக்கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அவர் ஓரங்கட்டப்பட இருப்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

click me!