வீழ்ந்தது கோவா; வென்றது டெல்லி…

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 02:27 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
வீழ்ந்தது கோவா; வென்றது டெல்லி…

சுருக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெர்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் புருனோ பெலிசாரிக்குப் பதிலாக மார்செலோவை களமிறக்கியது டெல்லி அணி. அதற்கு 72-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. சேன்டானா கொடுத்த கிராஸில் மார்செலோ கோலடித்தார்.

இதன்பிறகு உத்வேகம் பெற்ற டெல்லி அணி 76-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. மார்செலோ கொடுத்த கிராûஸப் பயன்படுத்தி ரிச்சர்ட் காட்úஸ இந்த கோலை அடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில், டெல்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற டெல்லி அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கோவா அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டம் எதுவும் இல்லை. புதன்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

NZ vs IND : மேட் ஹென்ரியின் புயல்வேக பவுலிங்... நியூசிலாந்திடம் சரண்டர் ஆன இந்தியா - 4வது ஒருநாள் போட்டியில் படுதோல்வி
NZ vs IND 4th ODI : கோலி - ரோகித் டக் அவுட்... முதல் ஓவரிலேயே 3 விக்கெட் காலி - இந்தியாவை கதறவிடும் நியூசிலாந்து