தம்பி நீ செய்றது கொஞ்சம் கூட சரியில்ல!! கேப்டனாவது கூப்பிட்டு சொல்றது இல்ல..? தினேஷ் கார்த்திக்கை கண்டித்த கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Sep 20, 2018, 2:49 PM IST
Highlights

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் ஆகிய இருவரையும் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கண்டித்துள்ளார். 
 

இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் ஆகிய இருவரையும் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கண்டித்துள்ளார். 

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிகின்றன. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்று நாளை தொடங்குகிறது. 

ஓராண்டுக்கு பிறகு நேற்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி வெறும் 162 ரன்களுக்கு சுருண்டது. 163 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 29 ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவின் இன்னிங்ஸின்போது 18வது ஓவரை வீசிய ஃபகார் ஜமான், தனது தொப்பியை திருப்பி மாட்டிக்கொண்டு பந்துவீசினார். ஃபகார் ஜமானின் செயல் சரியானது அல்ல என கவாஸ்கர் கண்டித்துள்ளார். தொப்பியை திருப்பு போடுவது போன்ற செயல்களை எல்லாம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் செய்யலாம். தேசிய அணிக்காக ஆடும்போது இப்படியெல்லாம் செய்யக்கூடாது. ஃபகார் ஜமானிடம் இதை அந்த அணியின் கேப்டனாவது சொல்லியிருக்கலாம் என கவாஸ்கர் தெரிவித்தார். அடுத்த ஓவரை வீசும்போது, தொப்பியை அம்பயரிடம் கொடுத்துவிட்டார் ஃபகார் ஜமான். 

அதேபோல தினேஷ் கார்த்திக்கையும் கவாஸ்கர் கண்டித்துள்ளார். தினேஷ் கார்த்திக், அவரது பெயரின் இனிஷியலை மட்டும் “DK" என்று குறிப்பிட்ட ஜெர்சியைத்தான் அணிந்துவருகிறார். அதையும் கவாஸ்கர் கண்டித்துள்ளார். அவரது பெயரை மக்கள் அடையாளம் காணும்விதமாக பெயரைத்தான் ஜெர்சியில் குறிப்பிட வேண்டும். அவரை அந்த பெயரில் தான் அழைக்கிறார்கள் என்றாலும் கூட, அவரது பெயரை குறிப்பிட்டு இனிஷியலையும் சேர்த்துக்கொள்ளலாம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!