ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான முழு அட்டவணை!! இந்தியா யாருடன் என்றைக்கு மோதுகிறது..?

Published : Sep 20, 2018, 12:55 PM IST
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான முழு அட்டவணை!! இந்தியா யாருடன் என்றைக்கு மோதுகிறது..?

சுருக்கம்

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றிற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.   

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றிற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றன. 

லீக் சுற்றில், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளிடமுமே தோல்வியை தழுவிய இலங்கை தொடரை விட்டு வெளியேறியது. அதேபோல், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ஹாங்காங் அணியும் தொடரை விட்டு வெளியேறியது. 

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை:

செப்டம்பர் 21: 

இந்தியா vs வங்கதேசம் - போட்டி நடைபெறும் இடம் துபாய்

பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான்  - போட்டி நடைபெறும் இடம் அபுதாபி

செப்டம்பர் 23:

இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம் துபாய்

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி நடைபெறும் இடம் அபுதாபி

செப்டம்பர் 25:

இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - துபாய்

செப்டம்பர் 26:

பாகிஸ்தான் vs வங்கதேசம் - அபுதாபி

செப்டம்பர் 28:

இறுதி போட்டி - துபாய்

PREV
click me!

Recommended Stories

Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Kane Williamson: இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த 'கேன் மாமா'.. சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேன் வில்லியம்சன்!