நம்மால் 40 பேரைக்கூட கூட்டிட்டு போக முடியும்!! கோலியும் சாஸ்திரியும் ஒர்த்தா இல்லையானு இதுல தெரிஞ்சுடும்.. தெறிக்கவிட்ட கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Dec 19, 2018, 4:13 PM IST
Highlights

இந்திய அணியின் மோசமான தேர்வு குறித்து முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

இந்திய அணியின் மோசமான தேர்வு குறித்து முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக திகழ்ந்தும் வெளிநாடுகளில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களை இழந்துவருகிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை வலுவான பவுலிங் யூனிட்டை கொண்ட இந்திய அணி வீழ்த்தி தொடரை வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்திய அணியின் தொடர் தோல்விக்கு அணி தேர்வும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி சரியான மற்றும் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. அதை குறிப்பிட்டு, கேப்டன், பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் கவாஸ்கர். 

பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அந்த அணியின் வெற்றிக்கு நாதன் லயனின் ஸ்பின் பவுலிங் தான் முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்ததே நாதன் லயனின் பவுலிங் மட்டும்தான். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சரித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அதேநேரத்தில் இந்திய அணி, ஸ்பின் பவுலரே இல்லாமல் அந்த போட்டியில் களமிறங்கியது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்தே இந்திய அணியின் மோசமான அணி தேர்வை நம்மால் பார்க்க முடிகிறது. அணி தேர்வு என்பது சாதாரண விஷயமல்ல, அது போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியமான காரணி. மோசமான அணி தேர்வாலேயே நாம் பல போட்டிகளில் தோற்றிருக்கிறோம். சரியான வீரர்களை தேர்வு செய்து ஆடவைத்தால் கண்டிப்பாக வெற்றி பெறமுடியும். 

அணி தேர்வில் எங்கு ஓட்டை இருக்கிறது என்பதை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். அப்படி செய்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லாததை எந்த மாதிரி பயன்படுத்திக்கொள்ள போகிறோம் என்பதை கேப்டனும் பயிற்சியாளரும் அணி நிர்வாகமும் சிந்தித்து செயல்பட வேண்டும். 

19 வீரர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளோம். 19 வீரர்களுடன் செல்ல வேண்டும் என்பதை யார் உறுதி செய்து அங்கீகரித்தது என்பது தெரியவேண்டும். இன்னும் 3 பேரை கூட்டி வந்திருக்கலாம். பிசிசிஐ செல்வாக்கு மிக்க அமைப்பு. எனவே நம்மால் 40 பேரைக்கூட அழைத்து செல்ல முடியும். அப்படியிருக்கையில், 19 வீரர்களுடன் சென்றுள்ளோம். அடுத்த போட்டியில் அணி தேர்வு சரியாக செய்து போட்டியை வெல்ல வேண்டும். அப்படியில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்துவிட்டால் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய இருவரையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார். 
 

click me!