கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவார்..? கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 3, 2018, 12:41 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் 38 சதங்கள் விளாசியுள்ள கோலி, 62 சர்வதேச சதங்களுடன், சச்சின், பாண்டிங், சங்ககராவிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார் கோலி. 782 இன்னிங்ஸ்களில் ஆடி 100 சர்வதேச சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆனால் கோலி வெறும் 388 இன்னிங்ஸ்களில் 62 சதங்களை விளாசியுள்ளார். 

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. சாதனைகள் என்றாலே முறியடிக்கப்படுவதுதான். அந்த வகையில் சமகால சிறந்த வீரரான கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துவிடுவார்.

ஆனால் இதே ஃபார்மில், நல்ல உடற்தகுதியுடன் கோலி இருப்பது அவசியம். சீராக தொடர்ந்து இதேபோன்று ஆடினால் மட்டும்தான் சச்சின் சாதனைகளை முறியடிக்க முடியும். இல்லையென்றால் கஷ்டம்தான். 

இந்நிலையில், கோலி குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கோலி இன்னும் 10 ஆண்டுகள் ஆடுவார். எனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் பல சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மையில் விராட் கோலியை பாராட்டி டுவீட் செய்திருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், கோலி கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடித்துவிடுவார்; அதற்கு மேல் எத்தனை சதங்கள் அடிக்கிறார் என்பதுதான் மேட்டர் என்பதுபோல் ஒரு டுவீட் செய்திருந்தார். அதாவது 120 சதங்களை கோலிக்கு அக்தர் இலக்காக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!