போங்க பாஸ் சும்மா காமெடி பண்ணிகிட்டு.. உங்களுக்கு இதே வேலையா போச்சு!! கங்குலி கிண்டல்

Published : Sep 10, 2018, 10:23 AM ISTUpdated : Sep 19, 2018, 09:17 AM IST
போங்க பாஸ் சும்மா காமெடி பண்ணிகிட்டு.. உங்களுக்கு இதே வேலையா போச்சு!! கங்குலி கிண்டல்

சுருக்கம்

ரவி சாஸ்திரியின் பேச்சு சிரிப்பை வரவழைப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.   

ரவி சாஸ்திரியின் பேச்சு சிரிப்பை வரவழைப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்த நிலையில், கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்தின் கை ஓங்கியே இருக்கிறது. 

டெஸ்ட் தொடரை இழந்ததன் எதிரொலியாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மூன்றாவது போட்டியில் வென்றபிறகு, தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்கும் தகுதிவாய்ந்த பெஸ்ட் டிராவலிங் அணி என சாஸ்திரி தெரிவித்திருந்தார். நான்காவது போட்டியில் தோற்றபிறகு, பெஸ்ட் டிராவலிங் டீம் என வாயில் மட்டுமே பேசாமல் செயலில் காட்ட வேண்டும் என சாஸ்திரிக்கு சேவாக் பதிலடி கொடுத்திருந்தார். 

ரவி சாஸ்திரி மீது சேவாக், கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடக்கூடிய அணியாக தற்போதைய இந்திய அணி தான் திகழ்கிறது என மீண்டும் தெரிவித்தார். 

ரவி சாஸ்திரியின் இந்த கருத்தை கேட்டு கடுப்பான கவாஸ்கர், கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியின் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றிகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார். 

கடந்த 20 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுகிறது என்ற ரவி சாஸ்திரியின் கருத்து, அந்த காலக்கட்டத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், அனில் கும்ப்ளே, வீரேந்திர சேவாக் போன்ற தலைசிறந்த வீரர்களை எல்லாம் குறைத்து மதிப்பிடும் வகையிலும் தரம்தாழ்த்தும் வகையிலும் அமைந்தது. 

ரவி சாஸ்திரியின் இந்த கருத்து, முதிர்ச்சியற்ற பேச்சு எனவும் வெவ்வேறு காலங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது எனவும் ஏற்கனவே கங்குலி பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் வாஹ் கிரிக்கெட் என்ற ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த கங்குலி, ரவி சாஸ்திரியின் கருத்து சிரிப்பை வரவழைப்பதாக கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். 

மேலும் வெளிநாடுகளில் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவரும் இந்திய அணி, வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக ஆடவேண்டுமென்றால், பேட்டிங் யூனிட்டில் மிகச்சிறந்த சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!