சாஸ்திரியிடம் கங்குலி கேட்க விரும்பும் கேள்வி இதுதானாம்!! சபாஷ் சரியான கேள்வி தாதா

By karthikeyan VFirst Published Sep 26, 2018, 5:13 PM IST
Highlights

கங்குலியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மீதான கோபத்தை காட்டமாக வெளிப்படுத்தினார்.
 

கங்குலியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மீதான கோபத்தை காட்டமாக வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மீது ஏற்கனவே பல விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு விமர்சனங்கள் வலுத்தன. அணியில் ரவி சாஸ்திரியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரியை விடுவித்துவிட்டு ராகுல் டிராவிட்டையோ அல்லது அனில் கும்ப்ளேவையோ பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. சாஸ்திரிக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுவதாக ரவி சாஸ்திரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

சாஸ்திரியின் கருத்துக்கு கங்குலி, கவாஸ்கர், சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் கண்டனமும் பதிலடியும் கொடுத்தனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதான அதிருப்தியையும் கோபத்தையும் அவ்வப்போது கங்குலி வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு தொடர்களுக்கு இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டை நியமிப்பதற்கு சாஸ்திரி முட்டுக்கட்டை போட்டதையும் கங்குலி பகிரங்கப்படுத்தினார். 

இந்நிலையில், தன்னுடைய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த கங்குலியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் ரவி சாஸ்திரி தொடர்பான கேள்விகளுக்கு சற்று காட்டமாகவே கங்குலி பதிலளித்தார். அந்த வகையில், சாஸ்திரியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன? என்ற கேள்விக்கு, அணியை நீங்கள் தேர்வு செய்கிறீர்களா? இல்லை ரோஹித் சர்மாவா? என கேட்க விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட்டில் கேப்டன் தான் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டுமே தவிர பயிற்சியாளர் அல்ல என்றும் கோலி ஒரு கேப்டனாக இன்னும் மேம்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


 

click me!