கோலியை பொருட்டாகவே மதிக்காத கங்குலி!! அதுதான் ரோஹித் இருக்காருல

By karthikeyan VFirst Published Sep 18, 2018, 2:10 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கோலி ஆடாதது, இந்திய அணிக்கு பாதிப்பாக இருக்காது என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 
 

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கோலி ஆடாதது, இந்திய அணிக்கு பாதிப்பாக இருக்காது என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகளும் இத்தொடரில் கலந்துகொண்டுள்ளன.

இத்தொடரில் பி பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியை தழுவியதால் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய மூன்று அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்திவிட்டது. இந்திய அணி இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது. 

இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. நாளை பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அந்த போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் ஓராண்டுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி என்பதால் நாளைய போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ஆசிய கோப்பை தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, பாகிஸ்தான் வீரர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. ஆனால் கோலி இல்லாமலேயே இந்திய அணி வலுவாகத்தான் உள்ளது. அதனால் கோலி இல்லாதது பாதிப்பாக இருக்காது என்பதுதான் இந்திய அணியின் முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கோலி அணியில் இல்லாதது பாதிப்பாக இருக்காது. கோலி இல்லாமலேயே இந்திய அணி வலுவாகத்தான் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை வெல்வதற்கு இரு அணிகளுக்குமே சமவாய்ப்பு உள்ளது என கங்குலி தெரிவித்துள்ளார். 

கோலி இல்லாவிட்டாலும் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் மீது கங்குலி அபார நம்பிக்கை வைத்துள்ளார். 
 

click me!