உலக கோப்பையில் இந்த டீம்தான் ஆடணும்னு சொல்லல.. ஆனால் ஆடினால் நல்லா இருக்கும்!! காம்பீர் தேர்வு செய்த இந்திய அணி

By karthikeyan VFirst Published Jan 27, 2019, 11:07 AM IST
Highlights

உலக கோப்பைக்கு முன் இந்திய அணி நல்ல ஃபார்மில் வலுவாக இருப்பது நல்ல விஷயம். பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. மேலும் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. தொடர் வெற்றிகள் இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்திய அணி எந்த அணிக்கு எதிராகவும் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஆரோக்கியமான விஷயம். இந்திய அணியின் ஆதிக்கம், ஒரு அணியாக அவர்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது. 

உலக கோப்பைக்கு முன் இந்திய அணி நல்ல ஃபார்மில் வலுவாக இருப்பது நல்ல விஷயம். பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. மேலும் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் காம்பீர். குல்தீப்பும் சாஹலும் சிறப்பாக பந்துவீசி வந்தாலும் அஷ்வின் எப்போதுமே கிரேட் ஸ்பின்னர் என்பதால், அவரை உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் என்பதே காம்பீரின் கருத்து. மேலும் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அணியில் இருப்பதால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தனக்கான சரியான வாய்ப்புக்காக காத்திருக்கலாம் என்பது காம்பீரின் பார்வை. 

கவுதம் காம்பீர் தேர்வு செய்துள்ள உலக கோப்பைக்கான அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், தோனி, கேதர் ஜாதவ், ராயுடு, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, அஷ்வின், குல்தீப் யாதவ், சாஹல்.
 

click me!