பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் மூன்றாம் சுற்றுக்கு தகுதி... என்னவொரு ஆட்டம்... 

First Published Jun 2, 2018, 1:32 PM IST
Highlights
French Open tennis Serena Williams qualifies for third round ... what a game ...


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 
 
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (36) தனது இரண்டாவது சுற்றில் 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா கடந்த ஆண்டு குழந்தை பிறந்ததால் பல மாதங்கள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அவர் 2017 ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு பின் முதன்முறையாக இப்போது தான் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
 
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நவோமி ஓஸ்காவை வென்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். 

அதேபோன்று, வோஸ்னியாக்கி 6-0, 6-3 என பிரான்ஸின் பாவ்லைனை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 6-4, 6-7, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்டோ பட்டிஸ்டுவாவை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பல்கேரியாவின் 4-ஆம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் வெர்டாஸ்கோவிடம் வீழ்ந்தார்.

ஜப்பானின் நிஷிகோரி 6-3, 6-1, 6-3 என்ற கணக்கில் ஜி.சைமனை வென்றார்.
 
மற்றொரு ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 6-2, 3-6, 4-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் போஸ்னியாவின் டாமிரை வென்று நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
 
 

tags
click me!