கூடுதலா ஒரு ஆளு இருந்தா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது!! 6 பேரு கண்டிப்பா வேணும்.. முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 26, 2019, 12:03 PM IST
Highlights

வெறும் 126 ரன்களை எடுத்த இந்திய அணி, அந்த எளிய இலக்கை எளிதாக எட்டவிடாத அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் கடுமையாக போராடிய இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. 

முதல் போட்டியில் தவானுக்கு பதிலாக கேல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரைசதம் அடித்தார் ராகுல். அந்த போட்டியில் ராகுல் மட்டுமே இந்திய அணியில் நன்றாக பேட்டிங் ஆடினார். மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். ரிஷப் பண்ட் 3 ரன்களில் ரன் அவுட்டானார். 

வெறும் 126 ரன்களை எடுத்த இந்திய அணி, அந்த எளிய இலக்கை எளிதாக எட்டவிடாத அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதம் அந்த அணிக்கு இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தது. அதனால் கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றியை பறித்தது ஆஸ்திரேலிய அணி.

இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, அணி தேர்வு குறித்து தனது ஆலோசனையை வழங்கியுள்ளார். முதல் போட்டியில் பும்ரா, உமேஷ், மார்கண்டே, சாஹல், குருணல் பாண்டியா என சரியாக 5 பவுலர்களுடன் களமிறங்கியது இந்திய அணி. 

எனவே கூடுதலாக ஒரு பவுலர் இல்லாததால், அவர்கள் 5 பேரை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலையை தவிர்க்க, இரண்டாவது டி20 போட்டியில் 6 பவுலர்களுடன் களமிறங்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். 6வது பவுலர் என்றால் அது ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தான். ரிஷப் பண்ட் நீக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், இரண்டாவது டி20 போட்டியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டால் தினேஷ் கார்த்திக் தான் நீக்கப்படுவார். 
 

click me!