ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் கால் பதிக்கிறது கோஸ்டா ரிகா…

Asianet News Tamil  
Published : Oct 09, 2017, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் கால் பதிக்கிறது கோஸ்டா ரிகா…

சுருக்கம்

For the fifth time in the World Cup tournament Kosta Rica has ...

அடுத்தாண்டு ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள கோஸ்டா ரிகா அணி தகுதிப் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்றது.

இதில், ஹோண்டுராஸ் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்வதை உறுதி செய்தது கோஸ்டா ரிகா.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் ஹோண்டுராஸ் வீரர் எடி ஹெர்னாண்டஸ் தலையால் முட்டி கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

இதனையடுத்து கடுமையாகப் போராடிய கோஸ்டா ரிகாவின் கென்டல் வாட்சன் "இஞ்சுரி' நேரத்தில் கோலடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

இந்த ஆட்டத்தை சமன் செய்ததன் மூலம் 5-வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது கோஸ்டா ரிகா.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!