Hockey World Cup 2023: முதல் போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 13, 2023, 9:25 PM IST
Highlights

ஹாக்கி உலக கோப்பை முதல் போட்டியில் ஸ்பெய்னை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று, உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
 

ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் இன்று ஒடிசாவில் தொடங்கியது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பிரிவு ஏ - அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்கா
பிரிவு பி - பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான்
பிரிவு சி - சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து
பிரிவு டி - இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், வேல்ஸ்

இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் அந்த வீரர்..! மிகப்பெரிய மேட்ச் வின்னருக்கு காம்ரான் அக்மல் புகழாரம்

பிரிவு டி-யில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஸ்பெய்ன் அணிகள் இன்று நடந்த முதல் போட்டியில் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் முதல் கோல் அடித்தார். அடுத்த 13வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்திக் 2வது கோல் அடித்தார்.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஸ்பின் அஸ்திரம்..! யார் இந்த டாட் மர்ஃபி..?

இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்க, அதன்பின்னர் ஸ்பெய்ன் அணி கோல் அடிக்க எவ்வளவோ முயன்றும் கடைசி வரை அடிக்க முடியவில்லை. இதையடுத்து 2-0 என வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது.
 

click me!