22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி…

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 02:11 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி…

சுருக்கம்

வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி கண்டது.

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 105.5 ஓவர்களில் 293 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் மொயீன் அலி 68, ஜானி பேர்ஸ்டோவ் 52 ஓட்டங்கள் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 6 விக்கெட் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 86 ஓவர்களில் 248 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 78 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 45 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 80.2 ஓவர்களில் 240 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 85 ஓட்டங்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 286 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 78 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 253 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

சபீர் ரஹ்மான் 59, தைஜுல் இஸ்லாம் 11 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
33 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி நாளான திங்கள்கிழமை களமிறங்கிய வங்கதேச அணி, அடுத்த 10 ஓட்டங்களுக்கு எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இரு விக்கெட்டுகளையும் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். இதனால் 81.3 ஓவர்களில் 263 ஓட்டங்களுக்கு சுருண்டது வங்கதேசம். சபீர் ரஹ்மான் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் கேரத் பட்டி 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை டாக்காவில் தொடங்குகிறது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1வது ODI: இந்திய அணி களமிறங்கும் புதிய மைதானம்.. இத்தனை கோடியில் உருவாக்கப்பட்டதா..?
ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!