
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களில் வீழ்ந்தது.
இங்கிலாந்தில் கேப்டன் இயான் மோர்கன் 80 ஓட்டங்கள், கிறிஸ் ஜோர்டான் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூஸிலாந்தின் தரப்பில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்தில் மார்டின் கப்டில் 62 ஓட்டங்கள் அடித்தார். மார்க் சாப்மேன் 37 ஓட்டங்கள் , கிராண்ட்ஹோம் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாதின் தரப்பில் டாம் கரன் உள்ளிட்ட நால்வர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்தின் காலின் மன்ரோ விரைவான அரைசதம் எடுத்தார். அதாவது 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து விரைவான அரைசதம் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.