அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவை ஓட வைத்த இங்கிலாந்து…

 
Published : May 26, 2017, 11:09 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவை ஓட வைத்த இங்கிலாந்து…

சுருக்கம்

England bowled by South Africa for the greatest bowling ...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிர்த்து இங்கிலாந்து ஆடிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் அபார பந்துவீச்சின் மூலம் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்சித்தது இங்கிலாந்து.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் லீட்ஸ் நகரில் பகலிரவாக நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்தில் கேப்டன் இயான் மோர்கன் அதிகபட்சமாக 93 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 107 ஓட்டங்கள் அடித்தார்.

தொடக்க வீரர் ஜேஸன் ராய் ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழக்க, உடன் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 60 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 61 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

ஜோ ரூட் 37 ஓட்டங்கள், பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்கள், ஜோஸ் பட்லர் 7 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இவ்வாறாக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்கள் எடுத்தது 340 இலக்காக வைத்தது இங்கிலாந்து.

மொயீன் அலி அரைசதம் கடந்து 77 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கிறிஸ் மோரிஸ், அங்கிலே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ரபாடா, வேய்ன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து களம் கண்ட தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரரம் ஆம்லா அதிகபட்சமாக 76 பந்துகளுக்கு 8 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து பிளெஸ்ஸிஸ் 61 பந்துகளுக்கு 8 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள், டி வில்லியர்ஸ் 38 பந்துகளுக்கு 7 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்தனர்.

டி காக் 5 ஓட்டங்கள், டுமினி 15 ஓட்டங்கள், மில்லர் 11 ஓட்டங்கள், கிறிஸ் மோரிஸ் 5 ஓட்டங்கள், வேய்ன் 19 ஓட்டங்கள், அங்கிலே 4 ஓட்டங்கள், ரபாடா 19 ஓட்டங்கள் என சொற்பமாக ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட்டானதால் 45 ஓவர்களிலேயே 267 ஓட்டங்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆதில் ரஷீத், மொயீன் அலி தலா 2, மார்க் வுட், லியாம் பிளங்கெட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருதை மொயீன் அலி தட்டிச் சென்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!