
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் அசார் அலி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
துபாயில் வியாழாக்கிழமை தொடங்கிய பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் எடுத்தது.
140 வருட கிரிக்கெட் வரலாற்றில் 2-வது பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் அசார் அலி 184 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இதன் மூலம் பகலிரவு டெஸ்ட்டில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் அசார் அலி. சர்வதேச போட்டிகளில் அவரது 11-வது சதமாகவும் இது அமைந்தது.
மற்றொரு தொடக்க வீரரான ஷமி அஸ்லாம் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 215 ஓட்டங்கள் சேர்த்தது. 2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆசாத் ஷபிக் நிதானமாக விளையாடினார். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் எடுத்தது.
அசார் அலி 146 ஓட்டங்களுடனும், ஆசாத் ஷபிக் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். வெள்ளிக்கிழமை 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினர்.
ஆசாத் ஷபிக் 67 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அசார் அலி 357 பந்துகளில், 19 பவுண்டரிகளுடன், ஒரு சிக்ஸருடன் இரட்டை சதம் விளாசினார். 137 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 476 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அசார் அலி 248, பாபர் அஷாம் 50 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.