
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில், முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியின் விராத் கோஹ்லி - புஜாரா ஜோடி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. இந்த ஆட்டத்தின் 56.2 ஓவரின்போது 97 ரன்கள் குவித்திருந்தார் புஜாரா.
இடைவேளைக்கு முன் இன்னும் 3 ரன்கள் எடுத்தல் சதம் என்னும் நிலைமையில் புஜாரா ஆடிக்கொண்டிருந்த போது திடீரென நாய் ஒன்று கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்துள்ளது. இதனால் நடுவர் உடனடியாக போட்டியை நிறுத்தியதுடன், இடைவேளை விட்டார்.
உணவு இடைவேளைக்கு முன்பாக சதமடித்து விடவேண்டும் என்ற நோக்கில் ஆடிக்கொண்டிருந்த புஜாரா, உணவு இடைவேளைக்குப் பின்னரே தனது சதத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து ஆடிய புஜாரா 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.