
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த லூயிஸ் நோர்டான் டி மத்தோஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
நோர்டான் (63), போர்ச்சுகல் அணியின் முன்னாள் வீரர். அவர் தனது ஓய்வுக்குப் பிறகு பென்பிகா அணி, கினியா பிஸாவ் தேசிய அணி ஆகியவற்றுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.
அவர் தனது ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரிகளை அடுத்த வாரம் சந்திப்பார் என தெரிகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நிகோலய் ஆடம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகவே இருந்து வருகிறது.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது அகில இந்திய கால்பந்து சம்மேளனம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.