
பிரெஞ்ச் ஓபன் போட்டி ரஃபேல் நடால், மரின் சிலிக், ஷபவோலவ் உள்ளிட்டோர் அடுத்த சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.
பிரெஞ்ச் ஓபன் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடாலும், இத்தாலியின் சீமோன் பொலேலியும் முதல் சுற்றில் மோதினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-3, 7-6 (9) என்ற 3 செட்களில் நடால் அசத்தலாக வென்றார்.
நடால், அடுத்த சுற்றில் அர்ஜென்டீனாவின் கியுடோ பெல்லாவே சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் மூன்றாம் நிலை வீரர் மரின் சிலிக் 6-3, 7-5, 7-6 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை வென்றார்.
அதேபோன்று, கனடாவின் ஷபவாலோவ் 7-5, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸி வீரர் ஜான் மில்மேனை வீழ்த்தினார்.
ஓராண்டுக்கு மேலாக காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதன்முறையாக களம் காண்கிறார். தனது முதல் ஆட்டத்தில் செக் நாட்டின் பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார்.
பதினைந்து மாத தடைக்கு பின் வரும் மரியா ஷரபோவா தனது முதல் ஆட்டத்தில் டச் நாட்டின் ரிச்சேல் ஹோகேன்கெம்புடன் மோதுகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.