சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

 
Published : Dec 13, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சுருக்கம்

Do you know any place for Indian men and women teams in the international hockey rankings?

சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி 6-வது இடத்தையும், ஹாக்கி மகளிர் அணி 10-வது இடத்தையும் பெற்றுள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நேற்று தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய ஹாக்கி ஆடவர் அணி 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்திய ஹாக்கி மகளிர் அணி 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புணேவில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. எனினும், 1566 புள்ளிகளுடன் தொடர்ந்து 6-வது இடத்திலேயே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2005 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அர்ஜென்டீனா 1975 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

இதனிடையே, இந்திய ஹாக்கி மகளிர் அணி 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை வென்றதன் மூலம் ஸ்பெயின், ஜப்பான் அணிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 10-வது இடத்தைப் பிடித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் நெதர்லாந்து 2165 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 1823 புள்ளிகள் பெற்று இரண்டாவது  இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா