
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரரை வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் போட்டியில் போட்டித் தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது 2-வது சுற்றில் ஸ்பெயினின் ஜேம் முனாருடன் மோதினார். இதில், 7-6(7-1), 6-4, 6-4 என்ற செட்களில்ஜேம் முனாரை வீழ்த்தினார் ஜோகோவிச்.
அதேபோன்று, போட்டித் தரவரிசையில் 13-வது இடத்திலிருக்கும் ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட் 6-4, 7-5, 6-3 என்ற செட்களில் கொலம்பியாவின் சான்டியாகோ கிரால்டோவை வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் போஸ்னிய வீரர் டாமிர் ஸும்ஹுர் 6-3, 6-3, 5-7, 1-6, 7-5 என்ற 5 செட் கணக்கில் மால்டோவாவின் ராடு அல்போட்டை தோற்கடித்தார்.
அதேபோன்று, போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா 7-6(7-0), 7-6(7-2), 3-6, 6-4 என்ற செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை வீழ்த்தினார்.
வேறொரு ஆட்டத்தில் அர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயர் 6-2, 6-7(4-7), 2-6, 3-6 என்ற செட்களில் பிரான்ஸின் ஜூலியன் பென்னட்டியுவிடம் வீழ்ந்தார்.
இதேபோன்று, ஸ்பெயினின் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோ 6-3, 6-2, 6-2 என்ற செட்களில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ அன்ட்ரோஸியோவை வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.