
மாற்றுத் திறனாளிகளுக்கான சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதனை, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வி. சரோஜா தொடக்கி வைத்தார்.
சென்னை, அடையாறு, காந்தி நகர், கெனால் பேங்க் ரோடில் அமைந்துள்ள புனித லூயிஸ் காதுகேளாத மற்றும் பார்வையற்றோருக்கான உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழா -2017-ஐ முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.
ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், நடைப்போட்டி, உருளைக் கிழங்கு சேகரித்தல் உள்ளிட்ட 80 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளை சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வி. சரோஜா கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவியர் 800 பேர் பங்கேற்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வி. அருண்ராய், சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.