ஐபிஎல்லில் தோனியை விட தினேஷ் கார்த்திக் தான் கெத்து!! எப்படினு பாருங்க

By karthikeyan VFirst Published Feb 18, 2019, 12:17 PM IST
Highlights

தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்தவர் தோனி. அதன்பிறகு அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. இன்றுவரை அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்துவருகிறார். 
 

இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு தலைசிறந்த விக்கெட் கீப்பர். அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்சுகள் என மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக வலம்வருகிறார்.

தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்தவர் தோனி. அதன்பிறகு அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. இன்றுவரை அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்துவருகிறார். 

இப்போதுவரை அவரது விக்கெட் கீப்பிங் செயல்பாடுகள் மிரளவைக்கின்றன. அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கூட மின்னல்வேக ஸ்டம்பிங்குகள் சிலவற்றை செய்து மிரட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 100 ஸ்டம்பிங்குகளுக்கு மேல் செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி தான். ஒருநாள் கிரிக்கெட்டில் 119 ஸ்டம்பிங்குகள் மற்றும் 311 கேட்ச்சுகளுடன் 430 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ள தோனி, மூன்றாவது இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டியிலும் 90 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ள தோனிதான் முதலிடத்தில் உள்ளார். 

இவ்வாறு சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக திகழும் தோனி, ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக்கிற்கு பின்னால் தான் உள்ளார். ஐபிஎல்லில் 124 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார் தினேஷ் கார்த்திக். ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான். தினேஷ் கார்த்திக்கிற்கு அடுத்த இடத்தில் தான் தோனி உள்ளார். தோனி 116 டிஸ்மிஸல்ஸுக்கு காரணமாக இருந்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் கெத்தான விக்கெட் கீப்பராக இருக்கும் தோனியை ஐபிஎல்லில் ஓரங்கட்டி கெத்து காட்டுகிறார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆடியுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!