தோனி ஆடும் கடைசி ஒரு நாள் தொடர்….

 
Published : Jan 05, 2017, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
தோனி ஆடும் கடைசி ஒரு நாள் தொடர்….

சுருக்கம்

ஒருநாள் போட்டி மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் தோனி தனது கடைசி ஒருநாள் தொடரை ஆட இருக்கிறார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) புதன்கிழமை அறிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு தோனி தயாராக இருக்கிறார் என பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டியிலிருந்து 2014 டிசம்பரில் தோனி ஓய்வு பெற்றார். அவருடைய தலைமையில் இந்தியா 27 வெற்றி, 18 தோல்விகளை சந்தித்துள்ளது. 15 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை வகித்து வரும் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பையும் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!