"7-7-27" கூல் தோனி சொன்ன "ரகசியம்"..!! csk வெற்றிக்கு பின் இப்படி ஒரு அதிசயமா...?!

 
Published : May 29, 2018, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
"7-7-27" கூல் தோனி சொன்ன "ரகசியம்"..!! csk வெற்றிக்கு பின் இப்படி ஒரு அதிசயமா...?!

சுருக்கம்

dhoni spoke about final match success

7-7-27 கூல் தோனி சொன்ன ரகசியம்..!! csk வெற்றிக்கு பின் இப்படி ஒரு அதிசயமா...?!

ஐபிஎல் 11 ஆவது தொடரின் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு உலகம் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இரண்டு ஆண்டு காலம் தடைக்கு பிறகு, பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மீண்டும்       ஐபிஎல் தொடரில் விளையாடிய சிஎஸ்கே, நேற்று முன்தினம் 27 ஆம் தேதி நடைப்பெற்ற  இறுதி போட்டியில்  கோப்பையை கைப்பற்றியது

இதன் பிறகு,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தோனி, "நாங்கள் பந்து வீச்சை தேர்வு செய்ததும், எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர்...ஐதராபாத் அணியின்  பேட்டிங் ஸ்டைல தெரிந்ததால் ஓரளவு சிறப்பாக செயல்பட முடிந்தது என தெரிவித்து  உள்ளார்

இதே போன்று நாங்கள் பேட்டிங் செய்ய தொடங்கிய போதே புவனேஸ்வர் குமார்.ரஷீத்  ஆகியோர் இருமுனை தாக்குதல் நடத்தினார்கள் என்றே சொல்லலாம்...அதாவது எங்களை கொஞ்சம் திணறடித்தனர். இருந்த போதிலும் நாங்கள் அதனை எதிர்கொள்ள  தாராகவே இருந்தோம்....

இதில் என்ன ஒரு சுவாரசியம் தெரியுமா..?

போட்டி நடந்தது 27 ஆம்  தேதி.என் ஜெர்சி எண் 7. அத்துடன் இது எனக்கு 7 ஆவது  இறுதிபோட்டி. அந்த வகையில் கோப்பையை வெல்வதற்கு பல காரணங்கள் உள்ளது என மகேந்திர சிங்க் தோனி தெரிவித்து உள்ளார்

வயதை பற்றி பேசும் போது பிட்னஸ் பற்றியும் பேச வேண்டும்..!

இந்த  அணியில் உள்ள வீரர்களின் வயடஹி பற்றி பேசும் போது, அவேர்களது பிட்னஸ் குறித்தும் பேச  வேண்டும் அல்லவா..? ராயுடு 33 வயதில் அசத்துகிறார்.

வாட்சன் ஒற்றை ரன்கள் ஓடினாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரது  வலிமையை நிரூபித்து காட்டுகிறார்.

எனவே வலிமை என்பது உடல் ஆரோக்கியத்தை சார்ந்தது என்பதை வீரர்கள் நிரூபித்து உள்ளனர்" என  கூல் தோனி கூறி உள்ளார்.       

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?