
வெற்றிக்கான வழிமுறைகளில் அதிகமாக கவனம் செலுத்துவனே தவிர முடிவுகளை பற்றி கவலைகொள்ள மாட்டேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகி இளம் வீரர்களுக்கு தோனி வழிவிட வேண்டும் எனவும் தோனியின் பேட்டிங் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், லட்சுமணன் மற்றும் அஜீத் அகர்கர் ஆகியோர் கூட சில விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், துபாயில் தனது கிரிக்கெட் அகாடமியை தொடங்கிவைத்து பேசினார்.
அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதே மிகப்பெரிய உத்வேகம். கடவுளின் கிருபை இல்லாத வீரர்கள் கூட தங்கள் விளையாட்டில் நிறைய சாதனை செய்துள்ளனர். அதற்குக் காரணம், அவர்களுக்கு இந்திய அணி மீதும் கிரிக்கெட் மீதும் உள்ள ஆர்வமும் நேயமும்தான். பயிற்சியாளர்கள் இதனைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அனைவரும் நாட்டுக்கு ஆடிவிட முடியாது.
கிரிக்கெட் அகாடமியைப் பொறுத்தவரை, நான் எப்போதுமே முடிவுகளை விட வழிமுறைகளையே பெரிதும் நம்புபவன். நான் ஒருபோதும் முடிவுகள் பற்றி கவலைப்பட்டதில்லை.
எது சரி என எனக்கு தோன்றுகிறதோ அதைத்தான் செய்துவந்துள்ளேன். அந்த சூழ்நிலையில், 10 ரன்களோ 15 ரன்களோ 5 ரன்களோ.. தேவை எதுவாக இருந்தாலும் எது சரியானதோ அதைத்தான் செய்வேன். நான் வழிமுறைகளிலேயே ஆழ்ந்து விடுவேன். முடிவுகள் பற்றிய சுமையை நான் சிந்திப்பதில்லை என்று தோனி தெரிவித்தார்.
மேலும் அவர் மீதான விமர்சனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது; எனவே அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.