வெளியேறுகிறார் மகேந்திர சிங் தோனி!! தோனி இடத்தை பிடிப்பது யார் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 24, 2018, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
வெளியேறுகிறார் மகேந்திர சிங் தோனி!! தோனி இடத்தை பிடிப்பது யார் தெரியுமா?

சுருக்கம்

dhoni rest in srilanka tri series

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, இன்று கடைசி போட்டியில் விளையாடுகிறது.

3 போட்டிகள் டெஸ்ட் தொடரை 2-1 என தென்னாப்பிரிக்காவும், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என இந்தியாவும் வென்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கேப்டவுனில் நடக்கிறது. இத்துடன் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிகிறது.

அதன்பிறகு அடுத்த மாதம் இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இலங்கையின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் மார்ச்  6ம் தேதி தொடங்கி 18ம் தேதி நிறைவடைகிறது.

ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக விளையாடிவரும் தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படுகிறது. கேப்டன் கோலிக்கும் ஓய்வளிக்கப்படுகிறது.

எனவே ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். விக்கெட் கீப்பர் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக வாய்ப்பை பெறுகிறார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SA: இன்று ஒரு மினி உலகக்கோப்பை பைனல்! Super 8ல் தென்னாப்பிரிக்காவை கதறவிடுமா இந்தியா? ரெக்கார்டுகள் சொல்லும் அதிரடி உண்மை!
ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஏமாற்றம்? இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் மழையின் குறுக்கீடு – லேட்டஸ்ட் ரிப்போர்ட்!