தோனி செம ஸ்மார்ட்டுங்க.. இந்த வீடியோவை பாருங்க ஏன்னு புரியும்

By karthikeyan VFirst Published Jan 19, 2019, 10:19 AM IST
Highlights

மெல்போர்ன் ஒருநாள் போட்டியில், தான் ஒரு ஸ்மார்ட்டான கிரிக்கெட்டர் என்பதை மீண்டும் நிரூபித்தார் தோனி. தோனி அதிகமான பந்துகளை ரன் எடுக்காமல் விட்டுவிடுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் அணியின் வெற்றிக்கு என்ன தேவை, வெற்றியை எப்படி அடையலாம் என்பதில் ஒரு தெளிவான பார்வையும் திட்டமும் தோனியிடம் இருக்கும். 

சர்வதேச அளவில் மிகவும் ஸ்மார்ட்டான கிரிக்கெட் வீரர் தோனி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சமயோசித புத்தி, நுண்ணறிவு, ஆட்டத்திறன், கேப்டன்சி ஆகியவற்றை நாம் பார்த்திருப்போம். 

கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர்கள், விளங்குபவர்கள் பலர். ஆனால் தனித்தனியாக இவற்றையெல்லாம் கடந்து ஒரு அறிவுக்கூர்மையான, திறமையான வீரர் என்றால் தோனி என்று சொன்னால் மிகையாகாது. அவர் கேப்டன்சியிலிருந்து விலகியபிறகும், அவர் கொடுக்கும் ஆலோசனைகள் அணிக்கு நல்ல பலனை கொடுக்கும். 

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து பல வெற்றிகளை குவித்து கொடுத்த தோனி, கேப்டன்சியிலிருந்து விலகி ஒரு வீரராக ஆடிவரும் நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். அதனால் பல விமர்சனங்களுக்கு ஆளானர். ஆனால் அதிலிருந்து மீண்டு வழக்கம்போல தன் மீதான விமர்சனங்களுக்கு தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார் தோனி. மெல்போர்னில் நடந்த கடைசி போட்டியில் 87 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

அந்த போட்டியில் தான் ஸ்மார்ட் என்பதை மீண்டும் நிரூபித்தார் தோனி. தோனி அதிகமான பந்துகளை ரன் எடுக்காமல் விட்டுவிடுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட போட்டியில் அணியின் வெற்றிக்கு என்ன தேவை, வெற்றியை எப்படி அடையலாம் என்பதில் ஒரு தெளிவான பார்வையும் திட்டமும் தோனியிடம் இருக்கும். அதனால் அவர் மந்தமாக ஆடினாலும், அணியை எப்படியாவது வெற்றி பெற வைத்துவிடுவார் என நம்பலாம்.

மெல்போர்ன் போட்டியில் இலக்கு மிகவும் குறைவும். 231 ரன்கள் மட்டும்தான் வெற்றிக்கு தேவை. எனினும் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. 46 ஓவர்கள் முடிந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 33 ரன்கள் தேவை. அந்த நிலையில், 47வது ஓவரை ரிச்சர்ட்ஸன் வீச தயாராவதற்கு முன்னதாக, தோனியும் ஜாதவும் ஒரு சிறிய டிரிங்ஸ் பிரேக் எடுத்துக்கொண்டனர். பின்னர் கிரீஸுக்கு செல்வதற்கு முன், தனது வலதுபுறத்தில் நின்றுகொண்டிருந்த அம்பயரிடம் சென்றார். அம்பயர் கையில் வைத்திருந்த பேப்பரில் இன்னும் எந்தெந்த பவுலர்களுக்கு ஓவர் மீதமிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்துகொண்டார். அதனடிப்படையில், கடைசி 3 ஓவர்களில் யார் யார் எந்த எந்த ஓவரை வீசுவார்கள்? ஆஸ்திரேலிய அணியின் டெத் ஓவர் திட்டத்தை தெரிந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும். 

pic.twitter.com/0M9Pxc5kEk

— Mushfiqur Fan (@NaaginDance)

ஆஸ்திரேலிய அணியின் டெத் ஓவர் திட்டத்தை தெரிந்துகொள்ளாமல் ஆடுவதை விட அதை தெரிந்துகொண்டு ஆடுவது சிறந்தது. அதைத்தான் தோனி செய்தார். 
 

click me!